நாடிப் புலங்கள் உழுவார் கரமும், நயவுரைகள் தேடிக்கொழிக்குங் கவிவாணர் நாவும், செழுங்கருணை ஓடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும், உவந்துநடம் ஆடிக் களிக்கும் மயிலே! உன் பாதம் அடைக்கலமே.