இன்று ஞாயிற்றுக்கிழமை, நாகராஜன் படுக்கையில் புரண்டு படுத்தான். இன்று சீக்கிரம் எழுந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏழேகால், ஏழரைக்கு எழுந்திருக்கலாம். பல் தேய்த்துவிட்டு நிதானமாய் இரண்டு காபி குடிக்கலாம்.